உங்கள் குழந்தை எழுத்து பிழையுடன் எழுதுகிறதா ,படித்தவுடன் மறந்து விடுகிறதா கற்றல் குறைபாடு
தம் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை,படித்த அனைத்தையும் உடனே மறந்து விடுகிறதா,எழுதினால் சகிக்காது ,ஏகப்பட்ட பிழை பெருக்குவதற்கு பதில் கூட்டுகிறான் ,நல்லா அறிவு இருக்கு ஆனா திமிரு படிப்பை தவிர எல்லாவற்றிலும் சுட்டி இப்படி திட்டி தீர்க்கும் அம்மாக்கள்
நாலு சாத்து சாத்துனா வழிக்கு வருவான் என மீசை முறுக்கும் அப்பாக்கள் இவர்களுக்கிடையே பாவம் குழந்தைகள் பெற்றோர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இச்செயல்கள் எல்லாம் குழந்தை வேண்டும் என்றே செய்வதில்லை கற்பதில் இயலாமை (learning diasbility ) இக்குறை dyslexia
இந்தியாவில் 20௦ சதவிதம் குழந்தைகள் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
இந்த குறை பாடு இந்தியாவில் சாதாரண கற்றல் குறைபாடு ஆகும் .இது பாதி பெற்றோருக்கும் ஏன் பல ஆசிரியருக்கும் கூட தெரிவதில்லை. மக்கு பையன் என ஒதுக்கிவிடுகின்றனர்
அக்குறையை பேசி அவமானபடுத்தி மனதளவில் காயப்படுத்தி நிரந்தர குறையை ஏற்ப்படுத்தி விடுகின்றனர்
இது ஒருநோய் இல்லை கற்றல் குறை பாடுதான் .மூளைக்கும் நரம்புக்கும் செயல் மாற்றங்களே ஆகும்
குறைபாடுகள்-- ball என்பதற்கு dall என்று எழுதுதல்.
கணக்கில் தவறு ஏற்படும்
முக்கியமாக வலது இடது என்று குழப்பம் ஏற்படும்
ஆங்கில எழுத்துக்களை வரிசைகிரமமாக சொல்வதில் திணறுவார் சில
குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடுவர்
கற்றலில் குறைபாடு என்பது மூளை வளர்ச்சி குறைபாடு அல்ல மற்றவர்களைவிட அதிக அறிவுத்திறன் சிந்தனைத்திறன் இருக்கும் மூளையில் உள்ள நரம்புகள் இணைப்பில் ஏற்படும் கோளாறே இந்த குறைபாடுக்கு காரணம் சிகிச்சை மாத்திரை மருந்து கொடுத்து சரிபடுத்த முடியாது.
சோதனைகள்
நரம்பியல் சோதனை உளவியல் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் இந்த சோதனையில் இக் அளவு ஞாபகத்திறன் ஒரு விசயத்தில் எந்த அளவு கவனம் செலுத்த முடிகறது, கவனச்சிதறல் எவ்வளவு உள்ளது என சோதிக்க படும்.
சிறப்பு பயிற்சி : அதற்கென தனி பயிற்சிவகுபுகள் உள்ளன
மொழி அடிப்படை எழித்து வரிசைகளை கற்று கொடுத்தல் எங்களை சரியாக கற்று கொடுத்தல் கணித்ததில் உள்ள கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் வழிமுறைகளை கற்று கொடுத்தல்;
குறையை நிறையக்கி சாதனை செய்தவர்கள்
அமெரிக்காவின் முதல் பணக்கரர் பில்கேட்ஸ்
விஞ்ஞானி தமஸ் ஆல்வா எடிசன்
இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டின்
உலகின் எட்டு தங்க பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நீக்கல் வீர மைக்கேல் பெல்ப்ஸ்
ஆதாரம் தினமலர்
Monday, 10 October 2011
Saturday, 1 October 2011
படித்ததில் பிடித்த சிந்தனை துளிகள்
பாலுக்காக அழும் குழந்தை,கல்விக்காக ஏங்கும் சிறுவன், வேலைக்காக அலையும் சிறுவன் , வறுமையில் வாடும் தாய், இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா
Monday, 19 September 2011
விபத்து-தவிர்க்க வேண்டியது
விபத்துகளில் சிக்கி தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்
பயணிகள் தப்பிக்க தேவையான வசதிகள் ஐ.ஜி.சைலேந்திரபாபு இ.கா.ப.
வேலூர் மாவட்ட்த்தில் நடந்த ஆம்னி பஸ்ஸின் விபத்துக்கு காரணம்,டிரைவரின் அதிகவேகம் மற்றும் பயணிகள் தப்பிக்க வழியில்லாமல்
இருந்ததுதான் சொகுசு பஸ்கள் விபத்திற்குள்ளானால் பயணிகள் தப்பிபதற்கு
பேருந்தின் கட்டமைப்பை மாற்றுவது குறித்து ஆய்வு நட்த்தினோம்.இதில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள ரிமோட் மூலம் இயங்கும் கதவை மாற்றி பயணிகள் எளிதில் திறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.பேருந்தின் பின்புறம் மேற்கூரை ஆகிய இடங்களில்,விபத்து நடந்தால் எளிதில் திறக்கும் வகையில் ஆபத்து கால கதவுகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு சிறிய அளவிலான,தீயணைப்பு நுரைப்பான்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு ஆலோசனைகளை,அறிக்கையாக தயாரித்து அரசுக்கு அனுப்புயுள்ளோம்.
ஆதாரம்: தினமலர்
களையெடுக்கும் இயந்திரம் அன்னா
ஒழிக்க வேண்டியது ஊழலை,ஊழலை ஒழிக்க பாடுபடுபவர்களை அல்ல
இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமல்ல,ஊழலும்,ஊழல் பணமும்,செய்யும் நபரும் அதிகம்தான்.யாராவது அதை தட்டிக் கேட்கவும்,ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சியுமாய்,முன்வந்து கேட்கச் சென்றால் அவரின் சொந்த நடைமுறையை விமர்ச்சிப்பதும்,அவரின் மீது அரசின் கடுமையான போக்குகளை கடைபிடிப்பதும் மக்களை எரிச்சலூட்டுகிறது.ஊழலை ஒழிக்க முன் வந்தவர்கள் தன் சொந்த,தனிப்பட்ட காரணதிற்காக அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
![]() |
| அன்னா ஹாசரே இளமை |
பூனைக்கு மணிகட்ட வந்த நபரின் மீதே மணியை கட்ட நினைப்பதும்,அதை விரட்ட நினைபதும் முட்டாள்தனம் வந்தது பூனை அல்ல புயல் போன்று ஆவேசமாய் புறப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களாகும்.ஒழிக்க வேண்டியது ஊழலைத்தான்,ஊழல் எதிர்பாளார்களை அல்ல
மாகாத்மா-மாவட்ட ஆட்சியர் சகாயம்
மகாத்மாவிற்கு சகாயம் செய்த ஆட்சியர் சகாயம்-சம்மன்
மாவட்ட ஆட்சியர் சகாயம் அனுப்பிய சம்மனில்,விவசாய நிலத்தின் நடுவே பொறியியல் கல்லூரி உள்ளதால் ஏற்படும் பாதிப்பை பற்றி கூறும்போது மகாத்மா காந்தியாரின் வார்த்தைகளை கோடிட்டு காட்டியுள்ளார்.
அவர்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியார் இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது.விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்,வளமான சாகுபடி நடந்து வரும் நிலத்தின் மத்தியில் கல்லூரி அமைந்தால் அது வணிக வளாகமாக மாறும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி வரும்,நிலம் ஒருவரிடமிருந்து வேறு ஒருவருக்கு மாரும் போது உணவின் தேவை உற்பத்தி தேவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.-
ஆதாரம் -தினமலர்
குஜராத்தின் வளர்ச்சி
குஜராத்தின் அபாரமான வளர்ச்சி –அமெரிக்க பாராளுமன்ற நிலைக்குழு
பொருளாதார நடவடிகைகளை ஒழுங்கு படுத்தி,சிகப்பு நாடா முறையை ஒழித்தது,ஊழலை குறைத்தது போன்ற நடைமுறைகளை செயல்படுத்தி அந்த மாநிலத்தின் வளார்ச்சிக்கு வழி வகுத்ததன் மூலம் தேசிய பொருளாதார வளார்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஒட்டுமொத்த இந்தியாவில் குஜராத்தின் மக்கள்தொகை வெறும் 5 சதவீதம்தான் ஆனால் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம் ஆகும்.
அறிக்கை வெளீயிடு –அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு
தகவல்-தினமலர்
Tuesday, 6 September 2011
குண்டுக்கு இறையாகும் பறவைகள்
குண்டுக்கு இறையாகும் பறவைகள்
உட்கார்திருக்கும்
பறவை எளிதில் சுடப்படும்,பறக்கும் பறவைகள் துப்பாக்கிக்கு
தப்பிக்கின்றன.-ஃப்ரான்சின் க்வார்ல்ஸ்.
September 5
September 5 Teachers day
ஆசிரியர் தினம் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
உழுது, உரமிட்டு, விதை விதைக்க தயாராக உள்ள இடம் பள்ளிக்கூடம்
அதில் விளைவிக்க தெரிந்த விவசாயிகளுள் மிகச் சிறந்தவர் Dr. ராதாகிருஷ்ணன்.
praburaj
ஆசிரியர் தினம் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
உழுது, உரமிட்டு, விதை விதைக்க தயாராக உள்ள இடம் பள்ளிக்கூடம்
அதில் விளைவிக்க தெரிந்த விவசாயிகளுள் மிகச் சிறந்தவர் Dr. ராதாகிருஷ்ணன்.
praburaj
சிந்தனை
சிந்தனையின் விளைவுகள்
இது எப்படி நடக்குமோ அது என்னவாயிற்றோ அங்கே என்ன நடந்ததோ
என்று எதையாவது சிந்தனை செய்து கொண்டிருப்பது மனதுக்கு நல்லதல்ல
எல்லாம் நிர்ணயித்த படியே நடக்கின்றது,நாம் சிந்தனை செய்ய வேண்டியது
எல்லாம் நல்ல படியே நடக்க வேண்டும் என்பதை மட்டுமே.நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை எதிர்பார்ப்பது, நல்ல விதையை விதைத்து நல்ல பழங்களை அறுவடை செய்வதற்கு சமமாகும்.
source:Bramma kumaris
Monday, 22 August 2011
முள் வேலிக்குள் மலர்கள்
விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவி போல (இலங்கைத் தமிழர்கள்)
அனுமன் வைத்த
நெருப்பின் மிச்சம்
இன்னும் எரிந்து கொண்டிருகிறது
தேயிலையும் தேங்காயும்
கொழித்த தேசம் இன்று
முள்வேலிக்குள்
முடங்கி கிடக்கிறது
ஊரில் உள்ளவர்களைப் பற்றி
விசாரித்தால் அந்த மேகம் கூட
கலைந்து போகின்றது.
Source: Daily Thanthi paper
அன்னா ஹாசரே- விதி ஒன்று செய்வோம்
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது அறிவியல் விதி அது போல மக்களவை, மாநிலங்களவை, சட்ட பேரவை உறுப்பினர்கள் ஊழல்,இலஞ்சத்திற்கு எதிராக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் வெற்றிடமாக இருந்ததால்,அதை நிரப்பும் ஆக்சிசன் 02 காற்றைப்போல வந்தார் அன்னா ஹாசரே.
Source: Dinamalar
இந்திய தலைவர்கள்
சர்தார் வல்லபாய் பட்டேல்
சர்தார் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞராக இருந்த போது ஒரு கொலை வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒர் தந்தி வந்த்து.அவர் தந்தியை படித்துவிட்டு பையில் வைத்துவிட்டு மீண்டும் வாதத்தை தொடர்ந்தார்.. அன்றைய வாதத்திற்க்கு பிறகு நீதிமன்றம் கலைந்தது.பிறகு தந்தியில் என்ன செய்தி என்று பட்டேலின் நண்பர் கேட்டார். அதற்க்கு பட்டேல் என் மனைவி இறந்து விட்டாள் என்று எவ்வித படபடப்புமின்றி கூறிவிட்டு நகர்ந்தார்.
ராஜாஜி
ஒருமுறை ராஜாஜி தன் ஊழியரிடம் ஒர் அஞ்சல் உறையைக் கொடுத்து அதில் தபால் தலையை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார். அந்த ஊழியர் அவசரத்தில் தபால் தலையை தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்து ரஜாஜியிடம் கொடுத்தார்.
இதை கவனித்த ராஜாஜி அட என்னப்பா இது நாங்கள் அனைவரும் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியை கவிழ்க்க படாதபாடு படுகிறோம்,அனால் நீ அந்தக் காரியத்தைஒரு நிமிடத்தில் செய்துவிட்டாயே என்று சிரித்து கொண்டே கூறினார்.
வினோபாபாஜி-வினோதமானவர்ஜி
சிறுவன் ஒருவன் நூல் நிலையத்தில் சட்டையிலாமல் படித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த நூல் உதவியாளர் தம்பி இப்படி சட்டையில்லாமல் வந்து படிக்க கூடாது என்றார்.உடனே அந்த சிறுவன் அப்படி எதாவது நூலக விதி இருக்கிறதா என்றான். உடனே அவர் மேலதிகாரியிடம் செய்தியை கூறினார்.சிறுவனை அழைத்த மேலதிகாரி சட்டையில்லாமல் இருப்பது நாகரிகமல்லவே என்றார்.அந்தச் சிறுவன் மிகத் துணிச்சலாக சிறுவர்களாக இருந்தாலும் உட்காரச் சொல்லிவிட்டு பேசுவதுதான் இந்த நாட்டின் நாகரீகம் என்றான்.பிறகு சிறுவனை உட்கார வைத்து பேசினார் அதிகாரி. வெப்ப நாடாகிய பாரதத்திற்கு ஏற்ற உடைப்பழக்கம் பற்றி தெளிவாக கூறிவிட்டு வெளியே வந்தான் சிறுவன் அந்த சிறுவன்தான் ஆச்சார்யா வினோபாபவே
டாக்டர் ராதாகிருஷ்ணன் -
பாராட்டு விழா ஒன்றில் ஆங்கிலேயர் ஒருவர் கூறினார் இறைவன் ஆங்கிலேயர்களான எங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார் மிகவும் முயற்சி செய்து அதிக விருப்பத்தோடு எங்களை படைத்தார்.எனவேதான் நாங்கள் இவ்வளவு வெள்ளையாக இருக்கிறோம் என்றார்.அங்கு ராதாகிருஷ்ணனும் இருந்தார் அந்த ஆங்கிலேயர்களின் ஆணவ பேச்சைக் கேட்டு புன்முறுவலுடன் கூடியிருந்தவர்களிடம் கூறினார்.நண்பர்களே ஒருமுறை இறைவன் ரொட்டி தயாரிக்க விருப்பம் கொண்டார் உடனே ரொட்டி தயாரிக்கவும் உட்கார்ந்தும் விட்டார்.அவர் தயாரித்த முதல் ரொட்டி சிறிது வேகவில்லை.அதன் காரணமாகத்தான் ஆங்க்கிலேயர்கள் பிறந்தனர் இரண்டாவது ரொட்டி அதிக நேரம் வெந்தது அதன் மூலம் நீக்கிரோக்கள் பிறந்தனர்.இவ்வாறு பயிற்சி செய்த அனுபவம் மூலம் மூன்றாவது ரொட்டியை சரியான பக்குவத்தில் தயாரித்தார். அது அரை வேக்காடாகவும் இல்லை கருத்தும் போகவில்லை அதன் காரணமாக இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம் என்றார்.இந்த பதிலை கேட்ட ஆங்கிலேயர்க்ள் வெட்கி தலை குனிந்தனர்.
ஆதாரம்-தினத்தந்தி
Friday, 19 August 2011
ராதகிருஷ்ணன் - வின்சென்ட் சர்ச்சில்
உயர்திரு முன்னாள் முதல் துணை குடியரசு தலைவரும், ஆசிரியருமான
டாக்டர். ராதாகிருஷ்ணன்,மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு.வின்சென்ட் சர்ச்சில் இருவரும் ஒரு உணவு விருந்தில் பேசிக்கொண்டது சர்ச்சில் – இந்தியர்களுக்கு சுகாதார பழக்கம் ஏதும் தெரியவில்லை,அவர்கள்
கையால் உணவு சாப்பிடுகிறார்கள்,மேசைக்கரண்டியை பயன்படுத்த தெரியவில்லை என்று ராதாகிருஷ்ணனை பார்த்து சொல்கிறார்.
ராதாகிருஷ்ணன் நீங்கள் பயன்படுத்தும் மேசைக்கரண்டி வேறு அனைவரும் பயன்படுத்திய எச்சில், ஆனால் என்னுடைய கையை என்னை தவிர வேரு யாரும் பயன்படுத்தவில்லை என்று நூதானமாக பதில் தந்து சர்ச்சிலை வியக்க வைத்தார்.
டாக்டர். ராதாகிருஷ்ணன்,மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு.வின்சென்ட் சர்ச்சில் இருவரும் ஒரு உணவு விருந்தில் பேசிக்கொண்டது சர்ச்சில் – இந்தியர்களுக்கு சுகாதார பழக்கம் ஏதும் தெரியவில்லை,அவர்கள்
கையால் உணவு சாப்பிடுகிறார்கள்,மேசைக்கரண்டியை பயன்படுத்த தெரியவில்லை என்று ராதாகிருஷ்ணனை பார்த்து சொல்கிறார்.
ராதாகிருஷ்ணன் நீங்கள் பயன்படுத்தும் மேசைக்கரண்டி வேறு அனைவரும் பயன்படுத்திய எச்சில், ஆனால் என்னுடைய கையை என்னை தவிர வேரு யாரும் பயன்படுத்தவில்லை என்று நூதானமாக பதில் தந்து சர்ச்சிலை வியக்க வைத்தார்.
சுதந்திரம்
சுதந்திரம் தரப்பட்டது அல்ல உங்கள் தியாகத்தல் பெறப்பட்டது.
அனுஅனுவாய் துன்பங்கள் நேர்ந்த பொழுதிலும் ,துப்பாக்கி குண்டுகளை மழையாய் பொழிந்தபோதிலும், இன்பமென மகிழ்ந்து, இன்னுயிர் தந்து,
இந்த மண்ணுயிர் காக்க மானமே பெரிதென போராடி, உதிரங்கள் பல வழிந்தோடி, உயிர்கள் பல மடிந்தோடி,இறுதியில் உங்கள் உறுதியில் பெறப்பட்டது.
நீங்கள் விபத்தில் இறந்திருந்தால் விதியென்று விட்டிருப்போம்,
நோயினால் இறந்திருதால் அழுது முடித்திருப்போம், உங்கள் தியாகம் விதியும் அல்ல, விபத்தும் அல்ல.
படித்ததில் பிடித்த சிந்தனை துளிகள்.
சுதந்திர இந்தியா
பாலுக்காக அழும் குழந்தை,கல்விக்காக ஏங்கும் சிறுவன், வேலைக்காக அலையும் சிறுவன் , வறுமையில் வாடும் தாய், இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா.
-பகத்சிங்-
-பகத்சிங்-
Subscribe to:
Posts (Atom)



