Monday, 22 August 2011

இந்திய தலைவர்கள்

சர்தார் வல்லபாய் பட்டேல்
சர்தார் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞராக இருந்த போது ஒரு கொலை வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒர் தந்தி வந்த்து.அவர் தந்தியை படித்துவிட்டு பையில் வைத்துவிட்டு  மீண்டும் வாதத்தை தொடர்ந்தார்.. அன்றைய வாதத்திற்க்கு பிறகு நீதிமன்றம் கலைந்தது.பிறகு தந்தியில் என்ன செய்தி என்று பட்டேலின் நண்பர் கேட்டார். அதற்க்கு பட்டேல் என் மனைவி இறந்து விட்டாள் என்று எவ்வித படபடப்புமின்றி கூறிவிட்டு நகர்ந்தார்.

ராஜாஜி
ஒருமுறை ராஜாஜி தன் ஊழியரிடம் ஒர் அஞ்சல் உறையைக் கொடுத்து அதில் தபால் தலையை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார். அந்த ஊழியர் அவசரத்தில் தபால் தலையை தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்து ரஜாஜியிடம் கொடுத்தார்.
இதை கவனித்த ராஜாஜி அட என்னப்பா இது நாங்கள் அனைவரும் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியை கவிழ்க்க படாதபாடு படுகிறோம்,அனால் நீ அந்தக் காரியத்தைஒரு நிமிடத்தில் செய்துவிட்டாயே என்று சிரித்து கொண்டே கூறினார்.

வினோபாபாஜி-வினோதமானவர்ஜி
சிறுவன் ஒருவன் நூல் நிலையத்தில் சட்டையிலாமல் படித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த நூல் உதவியாளர் தம்பி இப்படி சட்டையில்லாமல் வந்து படிக்க கூடாது என்றார்.உடனே அந்த சிறுவன் அப்படி எதாவது நூலக விதி இருக்கிறதா என்றான். உடனே அவர் மேலதிகாரியிடம் செய்தியை கூறினார்.சிறுவனை அழைத்த மேலதிகாரி  சட்டையில்லாமல் இருப்பது நாகரிகமல்லவே என்றார்.அந்தச் சிறுவன் மிகத் துணிச்சலாக சிறுவர்களாக இருந்தாலும் உட்காரச் சொல்லிவிட்டு பேசுவதுதான் இந்த நாட்டின் நாகரீகம் என்றான்.பிறகு சிறுவனை உட்கார வைத்து பேசினார் அதிகாரி. வெப்ப நாடாகிய பாரதத்திற்கு ஏற்ற உடைப்பழக்கம் பற்றி  தெளிவாக கூறிவிட்டு வெளியே வந்தான் சிறுவன் அந்த சிறுவன்தான்  ஆச்சார்யா வினோபாபவே


டாக்டர் ராதாகிருஷ்ணன் -
  பாராட்டு விழா ஒன்றில் ஆங்கிலேயர் ஒருவர் கூறினார் இறைவன் ஆங்கிலேயர்களான எங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார் மிகவும் முயற்சி செய்து அதிக விருப்பத்தோடு  எங்களை படைத்தார்.எனவேதான் நாங்கள் இவ்வளவு  வெள்ளையாக இருக்கிறோம் என்றார்.அங்கு ராதாகிருஷ்ணனும் இருந்தார் அந்த ஆங்கிலேயர்களின் ஆணவ பேச்சைக் கேட்டு புன்முறுவலுடன் கூடியிருந்தவர்களிடம் கூறினார்.நண்பர்களே ஒருமுறை இறைவன் ரொட்டி தயாரிக்க விருப்பம் கொண்டார்  உடனே ரொட்டி தயாரிக்கவும் உட்கார்ந்தும் விட்டார்.அவர் தயாரித்த  முதல் ரொட்டி சிறிது வேகவில்லை.அதன் காரணமாகத்தான் ஆங்க்கிலேயர்கள் பிறந்தனர் இரண்டாவது ரொட்டி அதிக நேரம் வெந்தது அதன் மூலம் நீக்கிரோக்கள் பிறந்தனர்.இவ்வாறு பயிற்சி செய்த அனுபவம் மூலம் மூன்றாவது ரொட்டியை சரியான பக்குவத்தில் தயாரித்தார். அது அரை வேக்காடாகவும் இல்லை கருத்தும் போகவில்லை அதன் காரணமாக இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம் என்றார்.இந்த பதிலை கேட்ட ஆங்கிலேயர்க்ள் வெட்கி தலை குனிந்தனர்.

ஆதாரம்-தினத்தந்தி

No comments:

Post a Comment