Monday, 10 October 2011

கற்றல் குறைபாடு-அதிக அறிவுத்திறன் சிந்தனை

உங்கள் குழந்தை எழுத்து பிழையுடன் எழுதுகிறதா ,படித்தவுடன் மறந்து விடுகிறதா கற்றல் குறைபாடு
          தம் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை,படித்த அனைத்தையும் உடனே மறந்து விடுகிறதா,எழுதினால் சகிக்காது ,ஏகப்பட்ட பிழை பெருக்குவதற்கு  பதில் கூட்டுகிறான் ,நல்லா அறிவு இருக்கு ஆனா திமிரு படிப்பை தவிர எல்லாவற்றிலும் சுட்டி இப்படி திட்டி தீர்க்கும் அம்மாக்கள்
 நாலு சாத்து சாத்துனா வழிக்கு வருவான் என மீசை  முறுக்கும் அப்பாக்கள்  இவர்களுக்கிடையே பாவம் குழந்தைகள் பெற்றோர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இச்செயல்கள் எல்லாம் குழந்தை வேண்டும் என்றே செய்வதில்லை கற்பதில் இயலாமை (learning diasbility ) இக்குறை dyslexia 

இந்தியாவில்      20௦ சதவிதம் குழந்தைகள் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

இந்த குறை பாடு இந்தியாவில் சாதாரண கற்றல் குறைபாடு ஆகும் .இது பாதி பெற்றோருக்கும் ஏன் பல ஆசிரியருக்கும் கூட தெரிவதில்லை. மக்கு பையன் என ஒதுக்கிவிடுகின்றனர்
அக்குறையை பேசி அவமானபடுத்தி மனதளவில் காயப்படுத்தி நிரந்தர குறையை ஏற்ப்படுத்தி விடுகின்றனர்
இது ஒருநோய்  இல்லை கற்றல் குறை பாடுதான் .மூளைக்கும் நரம்புக்கும் செயல் மாற்றங்களே ஆகும்     

குறைபாடுகள்-- ball என்பதற்கு dall என்று எழுதுதல்.

கணக்கில்  தவறு   ஏற்படும் 

முக்கியமாக வலது இடது என்று குழப்பம் ஏற்படும்
ஆங்கில எழுத்துக்களை    வரிசைகிரமமாக சொல்வதில் திணறுவார் சில

குறிப்பிட்ட விசயங்களை   மறந்து விடுவர்
கற்றலில் குறைபாடு என்பது மூளை வளர்ச்சி குறைபாடு அல்ல மற்றவர்களைவிட அதிக அறிவுத்திறன் சிந்தனைத்திறன்  இருக்கும் மூளையில் உள்ள நரம்புகள் இணைப்பில் ஏற்படும் கோளாறே இந்த குறைபாடுக்கு காரணம் சிகிச்சை மாத்திரை மருந்து கொடுத்து சரிபடுத்த முடியாது.

சோதனைகள்
நரம்பியல் சோதனை உளவியல் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் இந்த சோதனையில் இக் அளவு ஞாபகத்திறன் ஒரு விசயத்தில் எந்த அளவு கவனம் செலுத்த முடிகறது, கவனச்சிதறல் எவ்வளவு உள்ளது என சோதிக்க படும்.

சிறப்பு பயிற்சி : அதற்கென தனி பயிற்சிவகுபுகள் உள்ளன
மொழி அடிப்படை எழித்து வரிசைகளை கற்று கொடுத்தல் எங்களை சரியாக கற்று கொடுத்தல் கணித்ததில் உள்ள கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் வழிமுறைகளை  கற்று கொடுத்தல்;

குறையை நிறையக்கி சாதனை செய்தவர்கள்  
அமெரிக்காவின் முதல் பணக்கரர் பில்கேட்ஸ்

 விஞ்ஞானி தமஸ் ஆல்வா எடிசன்

இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டின்

உலகின் எட்டு தங்க பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நீக்கல் வீர மைக்கேல் பெல்ப்ஸ்
     


ஆதாரம் தினமலர்

Saturday, 1 October 2011

படித்ததில் பிடித்த சிந்தனை துளிகள்







பாலுக்காக அழும் குழந்தை,கல்விக்காக ஏங்கும் சிறுவன், வேலைக்காக அலையும் சிறுவன் , வறுமையில் வாடும் தாய், இவர்கள்  இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா

Monday, 19 September 2011

விபத்து-தவிர்க்க வேண்டியது

விபத்துகளில் சிக்கி தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்


     பயணிகள் தப்பிக்க தேவையான வசதிகள் ஐ.ஜி.சைலேந்திரபாபு இ.கா.ப.
           
        வேலூர் மாவட்ட்த்தில் நடந்த ஆம்னி பஸ்ஸின் விபத்துக்கு காரணம்,டிரைவரின் அதிகவேகம் மற்றும் பயணிகள் தப்பிக்க வழியில்லாமல்
இருந்ததுதான் சொகுசு பஸ்கள் விபத்திற்குள்ளானால் பயணிகள் தப்பிபதற்கு
பேருந்தின் கட்டமைப்பை மாற்றுவது குறித்து ஆய்வு நட்த்தினோம்.இதில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள ரிமோட் மூலம் இயங்கும் கதவை மாற்றி பயணிகள் எளிதில் திறக்கும் வகையில் அமைக்கவேண்டும்.பேருந்தின் பின்புறம் மேற்கூரை ஆகிய இடங்களில்,விபத்து நடந்தால் எளிதில் திறக்கும் வகையில் ஆபத்து கால கதவுகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு சிறிய அளவிலான,தீயணைப்பு நுரைப்பான்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட,பல்வேறு ஆலோசனைகளை,அறிக்கையாக  தயாரித்து அரசுக்கு அனுப்புயுள்ளோம்.


ஆதாரம்: தினமலர்

களையெடுக்கும் இயந்திரம் அன்னா

ஒழிக்க வேண்டியது ஊழலை,ஊழலை ஒழிக்க பாடுபடுபவர்களை அல்ல
  

இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமல்ல,ஊழலும்,ஊழல் பணமும்,செய்யும் நபரும் அதிகம்தான்.யாராவது அதை தட்டிக் கேட்கவும்,ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சியுமாய்,முன்வந்து கேட்கச் சென்றால் அவரின் சொந்த நடைமுறையை விமர்ச்சிப்பதும்,அவரின் மீது அரசின் கடுமையான போக்குகளை கடைபிடிப்பதும் மக்களை எரிச்சலூட்டுகிறது.ஊழலை ஒழிக்க முன் வந்தவர்கள் தன் சொந்த,தனிப்பட்ட காரணதிற்காக அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னா ஹாசரே இளமை

பூனைக்கு மணிகட்ட வந்த நபரின் மீதே மணியை கட்ட நினைப்பதும்,அதை விரட்ட நினைபதும் முட்டாள்தனம் வந்தது பூனை அல்ல புயல் போன்று ஆவேசமாய் புறப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களாகும்.ஒழிக்க வேண்டியது ஊழலைத்தான்,ஊழல் எதிர்பாளார்களை அல்ல

மாகாத்மா-மாவட்ட ஆட்சியர் சகாயம்

மகாத்மாவிற்கு சகாயம் செய்த ஆட்சியர் சகாயம்-சம்மன்
     மாவட்ட ஆட்சியர் சகாயம் அனுப்பிய சம்மனில்,விவசாய நிலத்தின்   நடுவே பொறியியல் கல்லூரி உள்ளதால் ஏற்படும் பாதிப்பை பற்றி கூறும்போது  மகாத்மா காந்தியாரின் வார்த்தைகளை கோடிட்டு காட்டியுள்ளார்.
அவர், 
      தேசத்தந்தை மகாத்மா காந்தியார் இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது.விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்,வளமான சாகுபடி நடந்து வரும் நிலத்தின் மத்தியில் கல்லூரி அமைந்தால் அது வணிக வளாகமாக மாறும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி வரும்,நிலம் ஒருவரிடமிருந்து வேறு ஒருவருக்கு மாரும் போது உணவின் தேவை உற்பத்தி தேவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.-

ஆதாரம் -தினமலர்

குஜராத்தின் வளர்ச்சி

குஜராத்தின்  அபாரமான வளர்ச்சி –அமெரிக்க பாராளுமன்ற நிலைக்குழு

      பொருளாதார நடவடிகைகளை ஒழுங்கு படுத்தி,சிகப்பு நாடா முறையை ஒழித்தது,ஊழலை குறைத்தது போன்ற நடைமுறைகளை செயல்படுத்தி அந்த மாநிலத்தின் வளார்ச்சிக்கு வழி வகுத்ததன் மூலம் தேசிய பொருளாதார வளார்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
ஒட்டுமொத்த இந்தியாவில் குஜராத்தின் மக்கள்தொகை வெறும் 5 சதவீதம்தான் ஆனால் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம் ஆகும்.
      அறிக்கை வெளீயிடு –அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு

தகவல்-தினமலர்

Tuesday, 6 September 2011

குண்டுக்கு இறையாகும் பறவைகள்


குண்டுக்கு இறையாகும் பறவைகள்

உட்கார்திருக்கும் பறவை எளிதில் சுடப்படும்,பறக்கும் பறவைகள் துப்பாக்கிக்கு தப்பிக்கின்றன.-ஃப்ரான்சின் க்வார்ல்ஸ்.